தலவாக்கலையில் தனியார் மருத்துவமனை சுற்றிவளைப்பு

சாய்ந்தமருதைச் சேர்ந்த  போலி ​ெடாக்டர் கைது

தலவாக்கலை லிந்துலை நகரசபையின் அனுமதி பெறாமல் நீண்டகாலமாக போலி ஆவணங்களை கொண்டு நடத்திய தனியார் மருத்துவமனையை பொலிஸார் சுற்றிவளைத்ததுடன் சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் போலி வைத்தியர் ஒருவரையும் தலவாக்கலை பொலிஸார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் (13) மதியம் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது

ஒரு வருடகாலமாக இயங்கி வந்த மருத்துவமனையின் வைத்தியர் எம்.பி.பி .எஸ் என்ற தகைமையை கொண்ட வைத்தியர் என தம்மை அடையாளப்படுத்தி கொண்டு சில பெண்களுக்கு கருக்கலைப்பு செய்து வந்ததாக இம் மருத்துவமனையில் தொழில் புரியும் தாதியரினால் தலவாக்கலை, லிந்துலை நகரசபையின் தலைவர் அசோக்க சேபாலவிடம் முறையிட்டுள்ளார்.

 இதனையடுத்து வைத்தியசாலைக்கு சென்ற தலவாக்கலை, லிந்தலை நகரசபையின் தலைவர் மற்றும் தலவாக்கலை பொலிஸாரும் வைத்தியசாலையை சோதனையிட்டபோது வைத்தியர் எம்.பி.பி. எஸ் தகைமையுடையவர்அல்ல என்பது பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

அத்தோடு அவரிடமிருந்த சான்றிதழ்கள் அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்டவையென பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
இதேவேளை இந்த மருத்துவமனையிலிருந்து பெருந்தொகையான மாத்திரைகளும் உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த வைத்தியர் சாய்ந்தமருது
பகுதியை சேர்ந்த (49 வயது) தம்பி மரிக்கார் மொஹமத் இஸ்மயில் என்பவர் சதேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யபட்ட வைத்தியரை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 

நோட்டன் பிரிட்ஜ், தலவாக்கலை குறூப் நிருபர்கள்
 

Sat, 06/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை