ஜப்பானில் தானியங்கி ரயில் பின்னோக்கி சென்று விபத்து

ஜப்பானில் தானியங்கி ரயில் ஒன்று தவறான திசையில் சென்றதால் நடந்த விபத்தில் 14 பேர் காயம் அடைந்தனர்.

ஜப்பானின் யோகோஹாமா பகுதியில் இருக்கும் ஷின் சுகிதா ரயில் நிலையத்தில் தானியங்கி ரயில் ஒன்று புறப்படும் போது முன்னாள் செல்வதற்கு பதிலாக பின்னோக்கி சென்றுள்ளது.

20 மீற்றர்களுக்கு தவறான திசையில் இந்த ரயில் சென்று தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 14 பயணிகள் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலர் மோசமான காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

சுமார் 20 மீற்றர் தவறான திசையில் ஓடிய பின்ன ‌ஷின் சுகிடா நிலையத்தில் ஒரு கடை மீது மோதியது என்று ரயில் சேவை நிறுவனத்தின் தலைவர் அகிஹிகோ மிகாமி கூறினார்.

இந்த விபத்து காரணமாக அந்த வழியாக ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் அந்த நாட்டில் ஓட்டுநர் இல்லா ரயில் விபத்துக்குள்ளாவது இதுவே முதல்முறையாகும்.

Tue, 06/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை