துருக்கியின் ஸ்தன்பூலில் தீர்க்கமான மறுதேர்தல்

துருக்கியின் ஸ்தன்புல் நகர மேயர் தேர்தலுக்காக நேற்று அந்நகர மக்கள் மீண்டும் வாக்களிப்பில் ஈடுபட்டனர்.

முன்னதாக நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சியின் எக்ரம் அமாமொக்லு 13,000 வாக்குகளால் வெற்றி பெற்றபோதும், தேர்தல் முறைகேடுகள் பற்றி ஆளும் ஏ.கே கட்சி குற்றம்சாட்டிது.

இந்நிலையில் அந்தத் தேர்தல் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையிலேயே மறு தேர்தல் இடம்பெறுகிறது. இதில் இமாமொக்லுவை எதிர்த்து ஆளும் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் பினாலி யில்திரிம் போட்டியிடுகிறார்.

இந்தத் தேர்தல் முன்னாள் ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவானுக்கு தீர்க்கமானதாக கருதப்படுகிறது.

15 மில்லியன் மக்கள் வசிக்கும் ஸ்தன்பூல் துருக்கி பொருளாதார மற்றும் கலாசார மையமாக இருக்கும் நிலையில் அந்நகரில் பெறும் வெற்றி துருக்கியின் வெற்றி என்று அந்த நகரில் முன்னாள் மேயரான எர்துவான் வர்ணித்துள்ளார்.

இஸ்லாமிய பின்னணி கொண்ட ஏ.கே கட்சியின் கோட்டையாக ஸ்தன்பூல் உள்ளது.

Mon, 06/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை