ஆப்கானிஸ்தானை இலகுவாக வீழ்த்திய நியூசிலாந்து புள்ளிப் பட்டியலில் முதலிடம்

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தாம் இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளிலும் வென்ற நியூசிலாந்து, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

கடந்த சனிக்கிழமை டாண்டனில் நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்று தனது மூன்றாவது வெற்றியைப் நியூசிலாந்து பதிவு செய்தது.

புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு இந்தப் போட்டி மூன்றாவது தோல்வியாகும்.

நீஷம் (5–31) மற்றும் பெர்கியுசன் (4–37) இருவரின் அதரடிப் பந்துவீச்சு மூலம் ஆப்கான் துடுப்பாட்ட விரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் அந்த அணி 172 ஓட்டங்களுக்கு சுருண்டது. மத்திய வரிசையில் ஹஷ்மதுல்லா ஷஹிதி 59 ஓட்டங்களை பெற்றார்.

பதிலெடுத்தாடிய நியூசிலாந்து அணியின் முதல் விக்கெட் முதல் பந்தில் பறிபோனபோதும் அந்த அணி நெருக்கடி இன்றி 173 ஓட்ட வெற்றி இலக்கை 3 விக்கெட்டுகளை இழந்து எட்டியது.

அணித்தலைவர் கேன் வில்லியம்ஸ் ஆட்டமிழக்காது 79 ஓட்டங்களைப் பெற்றார்.

புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இங்கிலாந்தைவிட இரண்டு புள்ளிகள் முன்னிலை பெற்றிருந்தாலும் நியூசிலாந்து அணி இந்தப் போட்டியில் ஓட்ட வீதத்தை அதிகரிக்கவில்லை.

அடுத்து இதுவரை எந்தப் போட்டியிலும் வெற்றிபெறாத தென்னாப்பிரிக்க அணியுடன் நியூசிலாந்து வியாழக்கிழமை மோதவுள்ளது.

Mon, 06/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை