இரத்தினக்கல் தொழில் முற்றாக செயலிழப்பு

பயங்கரவாத தாக்குதலின் எதிரொலி;

நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலையடுத்து நாட்டின் இரத்தினக்கல் தொழில்துறை முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை இரத்தினக்கல் மற்றும் இரத்தினக்கல் அகழ்வு சங்கத்தின் தலைவர் புன்சிரி தென்னகோன் நேற்று தெரிவித்தார்.

இச்சம்பவத்தின் பின் இரத்தினக்கல் கொள்வனவுக்காக வெளிநாட்டு வர்த்தகர்கள் இலங் கைக்கு வருகை தராமையே இதற்குக் காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.

இரத்தினக்கற்களை ஏற்றுமதி செய்யும் மத்திய மற்றும் சிறியளவிலான இரத்தினக்கல் வர்த்தகம் செய்பவர்களுக்கு இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன்படி இரத்தினக்கல் வர்த்தகர்கள் இரத்தினக்கல் அகழும் தொழிலாளர்கள் மூலப்பொருள் உற்பத்தியாளர்கள் உபகரணங்கள் தயாரிப்போர் இரத்தினக்கல் பட்டை தீட்டுவோர் தங்க ஆபரணங்கள் உற்பத்தி செய்வோர் இரத்தினக்கல் வியாபாரம் நடைபெறும் பகுதிகளில் விடுதிகளை நடாத்துவோர் உட்பட இத்தொழில் துறை சார்ந்த ஏனையோர் அனைவரும் இந்நிலைமையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி சுழற்சி நிருபர்

Mon, 06/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை