றிஷாட் பதியுதீன் பதவியை துறந்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்

அமைச்சர் றிஷாட் பதியுதீன் உடனடியாக தனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்து அவருக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பாக முறையான மற்றும் நடுநிலையான விசாரணை நடத்துவதற்கு வழிவிடவேண்டும் என பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

வியாழக்கிழமை அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான ஜாதிக ஹெல உருமயவின் நிலைப்பாட்டை விளக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் கூறுகையில்,

அமைச்சர் றிஷாட் பதியுதீன் மீதான விசாரணை பொலிஸ் உள்ளிட்ட சட்ட அமுலாக்கல் பிரிவினரால் குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த குற்றச்சாட்டுகள் கிரிமினல் குற்றங்கள் என்பதால் பாராளுமன்ற தெரிவுக்குழுவோ அல்லது பாராளுமன்றமோ அதனை பரிசீலிக்க முடியாது.

அத்துடன் மேற்படி விசாரணை பெறுபேறு தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்றத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார்.

Mon, 06/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை