ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர்கள்: சாதனையை முறியடித்த மோர்கன்

ஒருநாள் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா, ஏபி டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்லை பின்னுக்குத் தள்ளினார் மோர்கன்.

இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்றது. இங்கிலாந்து அணியின் தலைவர் ருத்ர

தாண்டவத்தால்தான் இவ்வளவு ஓட்டங்கள் குவிக்க முடிந்தது. அவர் 71 பந்தில் 4 பவுண்டரி, 17 சிக்சர்களுடன் 148 ஓட்டங்கள் விளாசினார்.

17 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள்அடித்த வீரர்கள் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இதற்கு முன் ரோகித் சர்மா அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 16 சிக்சர்களும், 360 டிகிரி என்று அழைக்கப்படும் ஏபி டி வில்லியர்ஸ் மேற்கிந்தியதீவுக்கு எதிராக 16 சிக்சர்களும், யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் சிம்பாப்வேவுக்கு எதிராக 16 சிக்சர்களும் விளாசியிருந்தனர்.

தற்போது மூன்று ஜாம்பவான்களின் சாதனையை மோர்கன் உடைத்தெறிந்துள்ளார்.

அத்துடன் இங்கிலாந்து அணி ஒரு நாள் சர்வதேச போட்டியில் 25 ஆறு ஓட்டங்கள் அடித்து புதிய சாதனை நிலை நாட்டியது.மேற்கிந்திய தீவு அணி இந்தவருடம் பெற்றிருந்த 24

ஆறு ஓட்டங்கள் சாதனையை இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி முறியடித்தது.

ரஷீட் கானின் ஓவரில் 11 சிக்ஸர் அடித்தமை சர்வதேச போட்டிகளில் ஒரு பந்து வீச்சாளரின் பந்து வீச்சில் பெறப்பட்ட அதிகூடுதலான ஓட்ட எண்ணிக்கையாகும்.

இங்கிலாந்து அணி இறுதி 8 ஓவரில் 125 ஓட்டங்களை குவித்தது.

உலக கிண்ண போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் ஒருவர் 22 சிக்ஸர் பெற்றது இரண்டாவது சந்தர்ப்பமாகும்.

இதற்கு முன்னர் கிறிஸ் கெயில் 39 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

அத்துடன் இங்கிலாந்து அணிக்கு இன்னும் 5 போட்டிகள் மீதமுள்ளது.

உலக கிண்ணத்தில் இந்த ஆட்டத்தில் 57 பந்து களில் மோர்கன் சதம் அடித்தது நான்காவது விரைவாக பெற்ற சதமாகும்.

அத்துடன் கெவின் ஒ பிரைன் இங்கிலாந்து அணிக்கு எதிராக 2011 ம் ஆண்டு விரைவாக சதம் பெற்றிருந்தார்.22 சிக்ஸர்களை ஒரு வர் இந்த உலக கிண்ண போட்டியில் அடித்துள்ளார்.

இங்கிலாந்து அணி 2007 ம் ஆண்டு உலக கிண்ணத்தில் 22 சிக்ஸர்களை அடித்திருந்தது.அத்துடன் இந்த உலககிண்ண போட்டி அடங்கலாக இங்கிலாந்து அணி 72 போட்டிகளில் பங்கேற்று 130 சிக்ஸர்களை அடித்துள்ளது.இந்த உலக கிண்ணத்தில் இதுவரை 47 சிக்ஸர்கள் அடித்துள்ளது.இன்னும் 5 போட்டிகள் மீதமுள்ளது.

இங்கிலாந்து அணி உலக கிண்ணத்தில் 386 ஓட்டங்கள் பங்களாதேஷ் அணிக்கு எதிராக காடிபில் பெற்றிருந்ததே அதிகூடுதலான ஓட்டமாகும்.இந்த போட்டியில் 6 விக்கெட் இழப்புக்கு 397 ஓட்டங்கள் பெற்றதே கூடுதலான ஓட்டமாக பதிவு செய்தது.உலக கிண்ண போட்டி ஒன்றில் ஒரு அணி பெற்ற 6 ஆவது அதி கூடுதலான ஓட்டமாகும்.

Thu, 06/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை