டெங்கு நோய் தலைதூக்கும் அபாயம்

தென்கிழக்கு பருவப்பெயர்ச்சி மழையுடன் டெங்கு நோய் தலைதூக்கும் அபாயம் எழுந்துள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது. இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் நுளம்பு குடம்பிகள் உருவாகும் இடங்களை அழித்துவிடுமாறும் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

இந்த வருடத்தில் இதுவரை 19,215 டெங்கு நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். இதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. காலி, சிரும்பல பகுதியில் கடந்த இரு மாதங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுவர்கள் உட்பட மூவர் உயிரிழந்தார்கள்.  

நாட்டில் பல பகுதிகளும் மழை பெய்து வரும் நிலையில், பல்வேறு பகுதிகளிலும் டெங்கு தலைதூக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நீர் தேங்கியிருக்கும் இடங்கள், வீட்டுச் சூழல் என்பவற்றை சுத்தமாக வைத்திருக்குமாறு கோரப்பட்டுள்ளது.  

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  

சப்ரகமுவ, மத்திய, மேல், வட மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 – 150 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.       (பா) 

Wed, 06/05/2019 - 09:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை