மாற்றங்களைக் கொண்டு வரவே பெருமளவு முஸ்லிம்கள் விருப்பம்

விவாகச் சட்டம்,ஆடை விவகாரம்

 மக்களை ஒற்றுமைப்படுத்தவே மதங்கள் உள்ளன.  மக்களைப் பிரித்து அழிப்பதற்கல்ல... பயங்கரவாதத்தைத்  தோற்கடிக்க வேண்டும். தேசியத் தன்மைக்குப் பதிலாக, அரேபிய தன்மையை ஏற்படுத்துவதற்கு அநேகமானோர் எதிர்ப்பு 

"விவாகச் சட்டம், ஆடை போன்றன தொடர்பில் தற்போது பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் அவற்றை மாற்றுவதற்கு விருப்பத்துடன் இருக்கின்றார்கள்" என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

'வஹாபிசம்' தொடர்பிலும் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு உள்ளது. தேசியத் தன்மைக்குப் பதிலாக அரேபிய தன்மையினைக் கொண்டு வருவதற்கு அநேகமானோர் எதிராக உள்ளனர். அரபி எழுத்துப் பாவனையை மாற்றுவதற்கு முஸ்லிம் சமய விவகார அமைச்சர் விருப்பம் தெரிவித்துள்ளார்" என்றும் சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.

கேள்வி: அண்மையில் நாட்டில் ஏற்பட்ட துர்ப்பாக்கிய சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தினுள் பல தடவைகள் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. எனினும் இவற்றில் மக்கள் பிரதிநிதிகளின் பங்குபற்றல் போதியளவில் இல்லை என மக்கள் கூறுகின்றனரே...

பதில்: -இந்த விவாதங்களின் போது பங்குபற்றல் தொடர்பில் பிரச்சினை இருந்ததை நான் ஏற்றுக் கொள்கின்றேன். அந்த விவாதங்களின் போது இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குத் தேவையான முன்மொழிவுகளை சபையில் முன்வைக்குமாறு நான் கூறினேன். எனினும் அங்கு இடம்பெற்றது ஒருவருக்கொருவர் சேற்றை வீசிக் கொண்டதாகும். அங்கு தேவையான விடயங்களை விட வேறு விடயங்கள் பேசப்பட்டமை தெரிந்ததுதான். எனினும் மொத்தத்தில் பாராளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் இது தொடர்பில் மேற்கொண்ட நடவடிக்கைகளில் குறைபாடுகள் உள்ளதாக நான் நினைக்கவில்லை.

கேள்வி: -அந்த நடவடிக்கைகள் என்ன?

பதில்: -பாராளுமன்றம் மிகவும் அமைதியாக முக்கியமான பல நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றது. விஷேடமாக இது தொடர்பில் நியமிக்கப்பட்ட துறைசார்ந்த கண்காணிப்பு குழுவினால் பல்வேறு சட்டங்களை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் தமது சமயத்தை அடிப்படையாக வைத்து மேற்கொள்ளும் சட்டவிரோத செயற்பாடுகள் அனைத்தையும் நிறுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பில் பாராளுமன்றம் மிகவும் செயல்ரீதியாகச் செயற்படுகின்றது. சமயங்கள் இருப்பது மக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கேயன்றி பிரித்து அழிப்பதற்கல்ல. எனவே நாம் இந்த தீவிரவாதத்தைத் தோற்கடிக்க வேண்டும். இந்தச் சட்டங்களை உருவாக்கியதன் பின்னர் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அதிகாரமும் பாராளுமன்றத்திலேயே கிடைக்க வேண்டும்.இதற்காக அனைத்துக் கட்சிகளது மக்கள் பிரதிநிதிகளும் தற்போது தமது ஒத்துழைப்பை வழங்கியிருக்கின்றார்கள். எனவே வரும் காலத்தில் அது துரிதமாக செயற்படுத்தப்படும்.

கேள்வி: -புதிதாக உருவாக்கப்படும் சட்டங்கள் பற்றி கூற முடியுமா?

பதில்: -விஷேடமாக இன்று கருத்து வேறுபாடுகளுக்கு உள்ளாகியிருக்கும் விடயம் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டமாகும். 12, -13 வயதில் பெண் பிள்ளைகளைத் திருமணம் செய்து வைப்பது நாட்டுச் சட்டத்திற்கு முரணானது. இது உலகமே ஏற்றுக் கொண்ட சிறுவர் உரிமைகளை மீறும் செயலாகும்.

இவ்வாறான சிறுவர் துஷ்பிரயோகங்கள் இன்று முன்னேற்றமடையாத கோத்திர சமூகங்களிலும் கூட நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. இதனைத் தடுப்பதற்கான சட்டங்களைக் கொண்டு வருவதற்கு எதிர்பார்க்கின்றோம்.அதே போன்று மதரசா பாடசாலைகளை அரச கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருதல், ஆள் அடையாளத்தை மறைக்கும் வகையிலான புர்கா போன்ற ஆடைகளை நீக்குவது போன்று பொது சமூகத்தின் நலனுக்குரிய விடயங்கள் தொடர்பில் ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது.

கேள்வி: -இந்தச் சட்ட உருவாக்கத்தின் போது முஸ்லிம் சமயத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் போன்றவர்களின் ஒத்துழைப்பு எவ்வாறிருந்தது?

பதில்: -அவர்களுள் அநேமானோர் இதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கினார்கள். இதனை எதிர்ப்பதாயின் அந்த தீவிரவாத கருத்துக்களையுடைய மிகச் சிறிய தரப்பினரே எதிர்பார்ப்பார்கள் என நான் நினைக்கின்றேன். அநேகமானோர் இந்தப் பிரச்சினையினால் விரக்கியுற்றிருந்தார்கள். இந்தப் பிரச்சினையினால் அவர்கள் மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள். அதே போன்று இதில் நான் கண்ட ஒரு விடயம் என்னவெனில் அவர்கள் இந்நாட்டு சட்டதிட்டங்களுக்கு அடிபடிந்து செயற்படுவதற்கு காட்டும் ஆர்வமாகும்.

அதனடிப்படையிலேயே நாம் இப்போது இந்த சட்டங்களில் திருத்தங்களைச் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றோம். இந்தச் சட்டங்களை நாம் அவசரகாலச் சட்டங்களின் கீழ் கொண்டு வரவில்லை. சாதாரண சட்டத்தின் கீழேயே கொண்டு வருகின்றோம். இதனடிப்படையில் திருமணச் சட்டம், ஆடை போன்றன தொடர்பில் தற்போது பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் அவற்றை மாற்றுவதற்கு விருப்பத்துடன் இருக்கின்றார்கள்.அதே போன்று வஹாபிசம் தொடர்பிலும் மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு உள்ளது. தேசிய தன்மைக்கு பதிலாக அரேபிய தன்மையினைக் கொண்டு வருவதற்கு அநேகமானோர் எதிராக உள்ளனர். அரபி எழுத்துப் பாவனையை மாற்றுவதற்கு முஸ்லிம் சமய விவகார அமைச்சர் விருப்பம் தெரிவித்துள்ளார். நாம் இந்தக் குழுவின் மூலம் துரிதமாகவே இந்தச் சட்டங்களைக் கொண்டு வருவதற்கே முயற்சிக்கின்றோம். இந்த நாட்டை எதிர்காலத்திற்காக மீதப்படுத்துவதே எம்மனைவரதும் விருப்பமாகும். இந்த நாட்டை தீவிரவாதத்திற்கும், அடிப்படைவாதத்திற்கும் கீழ்பட்ட நாடாகப் பார்ப்பதற்கு எம்மில் எவருக்கும் விருப்பமில்லை.

கேள்வி: -எனினும் மக்களுக்கு இந்த தெரிவுக் குழுக்களால் பயன் உள்ளது என்ற நம்பிக்கை இருக்கின்றதா?

பதில்: -சமய மற்றும் தேசிய நல்லிணக்கத்திற்கான நிலையான தெரிவுக் குழு என்றொரு தெரிவுக் குழு பாராளுமன்றத்தில் உள்ளது. உங்களுக்கு நினைவிருக்கலாம் கடந்த வருடம் திகனையில் ஏற்பட்ட சம்பவத்தின் பின்னர் சமய மற்றம் சமூகத் தலைவர்களின் ஒன்றுகூடல் இடம்பெற்றது. அங்கு தெளிவாகக் காணப்பட்ட விடயம் என்னவென்றால் இவை அனைத்தும் போதிய புரிந்துணர்வு இல்லாமையினால் இடம்பெற்றவை என்ற விடயமாகும்.

இந்தச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பது 15, -18 வயதுகளையுடைய தரப்பினராவர். அவர்கள் குறைந்தது யுத்தத்தின் கொடிய அனுபவங்களைக் கூட அனுபவிக்காதவர்கள். அவர்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தீவிரவாதத்தின் பின்னால் சென்றவர்கள். நாம் இவ்வாறான பிரச்சினைகள் மீண்டும் ஏற்படாமலிருப்பதற்கு சாதகமான பல்வேறு நடவடிக்கைகளை இந்த தெரிவுக் குழுவின் மூலம் மேற்கொண்டோம்.

அதே போன்று கடந்த ஏப்ரல் 21ம் திகதி தாக்குதலின் பின்னர் கூடிய இந்தத் தெரிவுக் குழு பத்து பிரதான முன்மொழிவுகள் மற்றும் அதற்குத் துணையான 24 விடயங்களை 'தியவன்னா அறிக்கை' என வெளியிட்டோம்.

துரதிர்ஷ்டவசமாக இதற்கு ஊடகங்களின் கவனம் அதிகம் கிடைக்கவில்லை. எனினும் நாட்டின் நிலையான அமைதிக்கு வெற்றிகரமான பிரவேசமாக அது அமையும் என என்னால் உறுதியாகக் கூற முடியும்.

(20ம் பக்கம் பார்க்க)

சாமிந்த வாரியகொட ...

தமிழில்: -எம்.எஸ்.முஸப்பிர்

(புத்தளம் விஷேட நிருபர்)

Wed, 06/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை