ஆப்கானை போராடி வென்ற இந்தியா

உலகக் கிண்ண லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் ஷமி ஹட்ரிக் விக்கெட் வீழ்த்த இந்தியா 11 ஓட்டங்கள் வித்தியாத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற 12 ஓட்டங்களை எடுக்க வேண்டிய நிலையில் அந்த ஓவரின் முதல் பந்துக்கு பெளண்டரி அடித்தபோது இந்திய அணி தோல்வி நெருக்கடிக்கு முகம்கொடுத்தது. எனினும் 52 ஓட்டங்களை பெற்றிருந்த முஹமது நபியை பிடியெடுப்பு மூலம் ஆட்டமிழக்கச் செய்த ஷமி, யோக்கர்கள் மூலம் அடுத்தடுத்த பந்துகளில் 10 மற்றும் 11 ஆவது வரிசை வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தார்.

இந்த தோல்வியின் மூலம் ஆப்கான் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்ததோடு இந்தியா, இங்கிலாந்தை பின்தள்ளி 3ஆவது இடத்திற்கு முன்னேறியது.

மந்தமான ஆடுகளத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 224 ஓட்டங்களை பெற்றது. அணித்தலைவர் விராட் கோஹ்லி 67 ஓட்டங்களை பெற்றார்.

இதுவரை இந்தியாவை வீழ்த்தியிராத ஆப்கானிஸ்தான் வெற்றியை நோக்கி முன்னேறிய நிலையில் ஒரு கட்டத்தில் 106 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. பின்னர் அந்த அணி 166 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனால் ஆப்கான் அணி 49.5 ஓவர்களில் 213 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஷமி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Mon, 06/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை