ஏபிசி வானொலி நிலையம் மீது சோதனை: அவுஸ்திரேலிய பொலிஸார் நடவடிக்கை

அவுஸ்திரேலிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் சிட்னியிலுள்ள தலைமையகத்தை போலீசார் சோதனையிட்டுள்ளனர். ஊடகவியலாளர்களை இலக்கு வைத்த அதன் நடவடிக்கைகளின் இரண்டாம் கட்டமாக இத்தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இரண்டு பத்திரிகையாளர்கள் மற்றும் செய்தி ஆசிரியர் ஒருவர் என மூன்று பேருக்கான பிடிவிறாந்துடன் பொலிஸார் ஏபிஸி வானொலியை முற்றுகையிட்டனர். மேற்படி தேடுதல் நடவடிக்கை குறித்து ஏபிஸி அதன் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலிய படைகளின் தவறான நடத்தை பற்றி ஒலிபரப்பான செய்தி தொடர்பாக அதிருப்தி கொண்ட பொலிஸார் அதுகுறித்தே விசாரணைகள் மேற்கொள்கின்றனர்.

ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை சோதனையிட முன்னர் அது குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளரின் வீடும் சோதனையிடப்பட்டது.

”இவ்விரு தேடுதல் நடவடிக்கைகளும் நாட்டின் ஊடகத்துறைக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாக அவுஸ்திரேலியாவின் பிரதான உடகவியலாளர் அமைப்பொன்று விசனம் தெரிவித்துள்ளது .

ஆப்கானிஸ்தானில் விசேட அவுஸ்திரேலிய படைகள் மேற்கொண்ட சட்டவிரோத கொலைகள் மற்றும் அதன் தவறான நடத்தைகள் பற்றி, 2017 ஆம் ஆண்டில் ஒலிபரப்பான தொடர் விவரணம் பற்றியதாகவே தற்போதைய தேடுதல் நடவடிக்கைள் அமைந்திருப்பதாக ஏபிசி தெரிவித்தது. மேற்படி விவரணம் ஏபிசிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய பாதுகாப்பு ஆவணமொன்றை அடிப்படையாகக் கொண்டதென்று ஏபிசி கூறுகின்றது.

இத்தேடுதல் குறித்து கருத்துக் கூறிய அவுஸ்திரேலியப் பொலிஸார், நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய விடயங்கள் ஒலிபரப்பியமை தொடர்பாக வே இத்தேடுதல் தநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தன.

Thu, 06/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை