பல்கலைக் கழக மாணவன் காவிந்தவிற்கு நிதி உதவி

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் திஸ்ஸமஹாராமை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தெபரவௌ தேசிய பாடசாலையின் சர்வதேச தரத்திலான சகலவசதிகளையும் கொண்ட நீச்சல் தடாகத்திற்கான நிர்மாணப் பணிகளை வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைசசர் சஜித் பிரேமதாஸ ஆரம்பித்து வைத்தார்.

தெபரவௌ தேசிய பாடசாலையின் அதிபர் தலைமையில் நிகழ்வு இடம் பெற்றதோடுபெரும் திரலானோர் கலந்து சிறப்பித்தனர். அமைச்சரின் சகலருக்கும் உதவி திட்டத்தின் கீழ் இது நிர்மாணிக்கபடுவதோடு இதற்கு தேசியகொள்கைகள்,பொருளாதார விவகாரம்,மீள் குடியேற்றம்,வடக்கு அபிவிருத்தி,புனருத்தாரனம் மற்றும் இளைஞர்விவகாரஅமைச்சு 550 இலட்சம் ருபா நிதியினை ஒதுக்கியுள்ளது.

திஸ்ஸமகாராமை தெபரவௌ தேசியபாடசாலையில் 3500 இற்கும் மேற்பட்டமாணவர்கள் கல்விகற்று வருவதோடு இவர்களுக்கு நீண்டகாலமாககுறைபாடாக இருந்து வந்த குறைபாட்டினையே அமைசசர் சஜித் பிரேமதாஸ நிறைவேற்றி வைத்துள்ளார். ஹம்பாந்தோட்டை வலயத்திலுள்ள பாடசாலைகளில் தெபரவௌ தேசிய பாடசாலையிலேயே முதல் தடவையாக நீச்சல் தடாகம் நிர்மாணிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிகழ்வின்போது அமைச்சரினால் இவ்வருடம் இத்தாலியில் நடைபெறவுள்ள உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் எமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி மெய்வல்லுனர் போட்டியில் கலந்து கொள்ளவுள்ள சப்பிரகமுவ பல்கலைக் கழக மாணவன் ஆர். வை. காவிந்தவிற்கு போட்டியில் கலந்து கொள்வதற்கான நிதி உதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்

Sat, 06/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை