எமது அரசு போல் எந்த அரசும் சவால்களை சந்திக்கவில்லை

வரலாற்றில் எமது அரசாங்கத்திற்கு போல் எந்த அரசாங்கத்துக்கும் சவால்கள் வரவில்லை. கடன் சுமை, குண்டுவெடிப்பு, இயற்கை அனர்த்தங்கள் என பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாங்கள் நாட்டை வளர்ச்சி பாதையில் இட்டுச் செல்கிறோம் என நீதி மற்றும்

சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரள நேற்று தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அதிகாரத்தில் இருக்கும் வரை நாட்டின் ஒரு அங்குல நிலத்தை யேனும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய மாட்டோம்.

பலாங்கொடை இம்புல்பே பிரதேசத்தில் சமுர்த்தி நிவாரணம் கிடைக்காத குடும்பங்களுக்கு புதிதாக சமுர்த்தி நிவாரண,உதவிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கடந்த காலங்களில் அரசியல் பக்கச்சார்பு மாத்திரம் சமுர்த்தி நிவாரணம் பெறுவதற்கான தகுதியாக தேவைப்பட்டது.அரச ஊழியர்கள், வர்த்தகர்கள் உட்பட வசதி படைத்தவர்கள் கடந்த காலங்களில் சமுர்த்தி நிவாரணங்களை பெற்றனர்.ஆனால் ஐ.தே.க. ஜே.வி.பி. ஆதரவாளர்களுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்கப்படவில்லை.ஆனால் எமது அரசு அரசியல் சுய இலாபங்களுக்காக சமுர்த்தி உதவிகளை வழங்கவில்லை. சில அரசியல்வாதிகள் நாம் நாட்டை சீனாவுக்கு விற்று விட்டதாக குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் தாய் நாட்டின் ஒரு அங்குலத்தையேனும் வெளிநாட்டவருக்கு விற்பனை செய்ய நாம் இடமளிக்கமாட்டோம். காலம் காலமாக நாம் அடுத்தவர் தயவில் வாழ்வதிலிருந்து மீள வேண்டும். நாம் வாக்குகளை பெறுவதற்காக சமுர்த்தியை வழங்கவில்லை. கடந்த காலங்களில் அரசியல் வாதிகளின் உதவி கிடைக்காது பாதிக்கப்பட்டவர்களுக்கே நிவாரணங்களை வழங்க தீர்மானித்தோம் என்றார்.

இரத்தினபுரி சுழற்சி நிருபர்

Mon, 06/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை