பாரிஸ் தேவாலய தீக்கான காரணம் குறித்து அறிக்கை

பாரிஸின் உலகப் புகழ்பெற்ற நொட்ரெ டாம் தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மூண்ட பெருந்தீக்கு சிகரெட் அல்லது மின்சாரக் கோளாறு காரணமாக இருக்கலாம் என்று அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

விசாரணை மேற்கொண்டவர்கள் 100 சாட்சிகளின் நேர்காணலின் அடிப்படையில் ஆரம்பக்கட்ட முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

தேவாலயத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தொழிலாளர்கள் சிலர் அவ்வப்போது புகைபிடித்ததாகப் பணிகளுக்குப் பொறுப்பேற்ற நிறுவனம் தெரிவித்தது.

ஆனால், ஒரு சிகரெட் துண்டினால் அவ்வளவு பெரிய தீ ஏற்பட வாய்ப்பில்லை என்று அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அந்தத் தீச்சம்பவத்தில் தேவாலயத்தின் கூம்பு வடிவக் கோபுரத்தின் பெரும்பகுதி சேதமடைந்தது.

எனினும் இந்த தீச்சபவத்திற்கு எந்த குற்றவில் பின்னணியும் இருப்பதற்கான எந்த ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பாரிஸ் தலைமை அரச வழக்கறிஞர் ரெமி ஹேயிட்ஸ் கையொப்பமிட்டு வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“இந்த திகதிக்கு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தீ ஏற்படுவதற்கான காரணத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை” என்று அதில் குறிப்பி்டப்பட்டுள்ளது.

Fri, 06/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை