இமயமலை பனிப்புயலில் சிக்கியோரின் சடலங்கள் மீட்பதில் தாமதம்

இந்தியாவின் இமயமலைப் பகுதியில் மலை ஏறச்சென்று பனிப்புயலில் சிக்கி இறந்த ஐவரின் உடல்களை மீட்கும் பணிகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தாமதமடைந்துள்ளது.

இமய மலையேறச்சென்ற, நான்கு பிரித்தானியர்கள், இரண்டு அமெரிக்கர்கள், ஒரு அவுஸ்திரேலியர் மற்றும் ஒரு இந்தியர் என 8 பேர் இந்தியாவின் இரண்டாவது பெரிய மலையான நந்தாதேவியிலுள்ள தங்களது முகாமுக்கு கடந்த வெள்ளியன்று திரும்பாததைத் தொடர்ந்து அவர்கள் எட்டுப் பேரும் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.

அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்ட இந்திய விமானப்படை விமானம், பனியில் பகுதியாகப் புதையுண்ட நிலையில் ஐந்து சடங்களை, ஒரு பாரிய மலைச்சரிவில் அடையாளம் கண்டது.

எனவே அவர்களின் சடலங்களைத் தேடும் பணிகள் நேற்று புதன்கிழமையன்று முடுக்கி விடப்பட்டபோதும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது கைகூடவில்லை என உயர் அரச அதிகாரியான விஜய் தெரிவித்தார்

"இதுவரை சடலங்கள் எவையும் மீட்கப்படவில்லை”. ஐவர் தவிர்ந்த ஏனையோரின் நிலை என்னவென்பது குறித்தும் தகவல் ஏதுமில்லை என்றும் அவர் தெரிவத்தார்.

சடலங்களை உத்தரகண்டுக்கு கொண்டு வர இந்திய- தீபெத்திய எல்லைப் படையினர் முயற்சிகள் மேற்கொள்கின்றனர்.

Thu, 06/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை