மெக்சிகோ மீதான வரியை நிறுத்தியது அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மெக்சிகோவுக்கு எதிராக விதிக்கவிருந்த வரிகளைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்.

இரு நாடுகளும் குடிநுழைவு தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால், வரிகள் காலவரம்பின்றி ரத்துசெய்யப்பட்டிருப்பதாகத் டிரம்ப் ட்விட்டரில் குறிப்பிட்டார்.

மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் கள்ளக் குடியேறிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த மெக்சிகோ கடுமையான நடவடிக்கை எடுக்க இணங்கியுள்ளதாக அவர் கூறினார். மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் கள்ளத்தனமாக நுழையும் குடியேறிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவோ, முற்றிலும் நிறுத்தவோ ஒப்பந்தம் வகைசெய்வதாக டிரம்ப் கூறினார்.

Mon, 06/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை