கிண்ணியாவில் சட்டவிரோத மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது

கிண்ணியாவில் சட்டவிரோத மீன்பிடி வலைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டதோடு, அவரிடமிருந்து அவ்வலைகளைக் கைப்பற்றியதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

கடற்படையினரும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து கிண்ணியா, மஹரூப் பிரதேசத்தில் சோதனை நடவடிக்கையில் நேற்று (04) ஈடுபட்டதாகவும், இதன்போது 239 சட்டவிரோத மீன்பிடி வலைகளை கைப்பற்றியதோடு, குறித்த சந்தேக நபரைக் கைதுசெய்ததாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.

50 மீற்றர் நீளமான 114 மீன்பிடி வலைகளும், 100 மீற்றர் நீளமான 125 மீன்பிடி வலைகளுமே இவ்வாறு கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றிய சட்டவிரோத மீன்பிடி வலைகளுடன் குறித்த சந்தேக நபரை, திருகோணமலை மீன்பிடித் திணைக்கள அதிகாரிகளிடம் மேலதிக நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளதாகவும், கடற்படையினர் தெரிவித்தனர்.  

Wed, 06/05/2019 - 10:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை