தென்னாபிரிக்காவுக்கு தொடர் தோல்வி பங்களாதேஷுக்கு அபார வெற்றி

12 ஆவது உலக கிண்ண போட்டியின் 5 ஆவது ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணியை 21 ஓட்டங்களால் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பங்களாதேஷ் அணி.

331 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என பதிலெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு 309 ஓட்டங்கள் பெற்று தோல்வியை தழுவியது.அவ்வணி உலக கிண்ணத்தில் பங்கேற்ற இரண்டு போட்டிகளிலும் தொடர் தோல்வியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக விக்கெட் காப்பாளர் குயின்டன் டி கொக் மற்றும் ஏகே மார்க்கரம் களமிறங்கி நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடிய வேளையில் கொக் 23 ஓட்டங்கள் பெற்ற போது விக்கெட் காப்பாளர் முஷ்பிகுர் ரஹீமால் ரன் அவுட் ஆக்கப்பட்டு ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். பின்னர் மார்கரம் இணைந்து ஆடுகளம் புகுந்தார் அணியின் தலைவர் பிளஸிஸ் அவரும் தனக்கு உரிய பாணியில் துடுப்பெடுத்தாடிக் கொண்ட நிலையில் மார்க்கரம் 45 ஓட்டங்கள் பெற்ற போது சஹீப் அல் ஹசன் பந்தில் ஆட்டமிழந்து வெ ளியேறினார். அணித்தலைவருடன் இணைந்தார் டேவிட் மில்லர் அவரும் பொறுப்பாக ஆடுவார் என்ற நிலையில் 38 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து தன் பாட்டியில் நடையை கட்டினார்.

 பின்னர் நம்பிக்கை நட்சத்திரமாக செயற்பட்ட அணியின் தலைவர் பிளஸி 5 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 62 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார். அவ்வணி வீரர்கள் பெரும் பதற்றத்துக்கு மத்தியில் ஆடியதால் விக்கெட் மள மளவென சரிந்தது.வென்டர்சன் 41 ஓட்டங்களுடனும் பெஹலவாயோ 8 ஓட்டங்களுடனும் மொரிஸ் 10 ஓட்டங்களுடனும் தென்னாபிரிக்க அணிக்கு பின் வரிசையில் நம்பிக்கை நட்சத்திரமாக செயற்பட்டு அதிரடியாக ஆடிய ஜேபி டுமினி 45 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து செல்ல அவ்வணியின் வெற்றி இலக்கு பிரகாசமிழந்தது.

ரபடா 13 ஓட்டங்களுடனும் தாஹீர் 10 ஓட்டங்களுடனும் களத்தில் இருக்க தென்னாபிரிக்க அணி 50 ஓவர்கள் நிறைவில் 309 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டை இழந்து 21 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. பங்களாதேஷ் அணி சார்பாக பந்து வீச்சில் ரஹ்மான் 3 விக்கெட்டையும் சயிபூடின் 2 விக்கெட்டையும் மிராஷ் ஹசன் ,சஹிப் அல்- ஹசன் தல ஒரு விக்கெட்டை பதம் பார்த்தனர்.

இப் போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வுசெய்தது.இந்த போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இடம்பெற்றது.

அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, அனைத்து வீரர்களின் பங்களிப்புடன் சவாலான ஓட்டத்தை குவித்தது. அந்தவகையில், அவ்வணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 330 ஓட்டங்களைப் பெற்றது. அவ்அணி சார்பாக, முஷ்பிகுர் ரஹீம் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 78 ஓட்டங்களையும், சகிப் அல்- ஹசன் 75 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்ததோடு, மஃமூதுல்லா 46 ஓட்டங்களையும், சௌம்ய சர்கார் 42 ஓட்டங்களையும் மற்றும் மொஸதிக் ஹொஸைன் 26 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி 330 ஓட்டங்கள் பெற்றது அதி கூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.

இதற்கு முன் 2015 ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக 329 ஓட்டங்கள் பெற்றதே கூடுலான ஓட்ட எண்ணிக்கையாகும் உலக கிண்ணத்தில் பெற்ற இந்த ஓட்ட எண்ணிக்கை சிறந்த அணிக்கு எதிராக பெற்ற முதல் தடவை இது என்பது குறிப்பிடத்தக்கது.அத்துடன் 2015 ம் ஆண்டு ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக 322 ஓட்டங்கள் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. பங்களாதேஷ் அணி தென்னாபிரிக்க அணிக்கு எதிராக 278 ஒட்டங்கள் பெற்றதே கூடுதலான ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது.உலக கிண்ண போட்டியில் பங்களாதேஷ் அணி சார்பாக 142 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக சஹிப் அல் ஹசன் -முஷ்பிகுர் ரஹீம் ஆகியோர் இவ்வாட்டத்தில் இணைந்து பெற்று கடந்த 2015 ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற உலக கிண்ண போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அடிலைட்டில் மஃமூதுல்லா -முஷ்பிகுர் ரஹீம் ஆகியோர் 141 ஓட்டங்கள் பெற்றதே அதி கூடுதலான இணைப்பாட்ட எண்ணிக்கையாக இருந்தது. அதனை இந்த ஜோடி இவ்வாட்டத்தில் முறியடித்தது.

இங்கிலாந்து அணி 2011 ம் ஆண்டு உலக கிண்ணத்தில் அயர்லாந்து அணி பெற்ற 328 ஓட்டங்களை துரத்தி அடித்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதே ஆண்டு தென்னாபிரிக்க அணி இந்திய அணி பெற்ற 297 ஓட்டங்களை துரத்தி அடித்து உலக கிண்ணத்தில் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது. பங்களாதேஷ் அணியின் சஹீப் அல்- ஹசன் 199 போட்டிகளில் பங்கேற்று 5000 ஓட்டங்கள் மற்றும் 250 விக்கெட் வீழ்த்தியவர் வரிசையில் பாகிஸ்தான் அணியின் அப்துர் ரஸாக்கை முந்தினார்.ரசாக் 258 போட்டிகளில் 5000 ஓட்டங்கள் மற்றும் 250 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பந்துவீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக, அன்டில் பெஹ்லுஹ்வாயோ, கிரிஸ் மோரிஸ் மற்றும் இம்ரான் தஹீர் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.இவ்வெற்றியுடன் இம்முறைக்கான தமது உலகக் கிண்ணத் தொடரினை வெற்றியுடன் ஆரம்பித்திருக்கும் பங்களாதேஷ் அணி, இந்த உலகக் கிண்ணத் தொடரில் வெற்றியை பதிவு செய்த முதல் ஆசிய அணியாகவும் மாறியிருக்கின்றது.

இந்த ஆட்டத்தில் 3 அரைச்சதம் பெறப்பட்டது.அதில் பங்களாதேஷ் சார்பாக இரண்டு அரச்சதமும் தென்னாபிரிக்க சார்பாக ஒரு சதமும் பெறப்பட்டது இப் போட்டியின் ஆட்ட நாயகனாக சஹீப் அல்- ஹசன் தெரிவானார்.

உலக கிண்ண ஆட்டத்தில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் கார்டிப் மைதானத்தில் மோதுகின்றன. (ஏ.ஆர்.பரீத்)

Tue, 06/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை