அவுஸ்திரேலிய மாணவர் வட கொரியாவில் மாயம்

அவுஸ்திரேலிய மாணவர் ஒருவர் வட கொரியாவில் கைது செய்யப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் வட கொரியாவிடம் விளக்கம் கேட்டுள்ளது அவுஸ்திரேலியா.

கைது செய்யப்பட்டதாக நம்பப்படும் அலெக் சிக்லீ வட கொரியாவின் பல்கலைக்கழகத்தில், கொரிய இலக்கியம் படித்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.

மாணவர் கடைசியாக மூன்று நாட்களுக்கு முன்னர் சமூக வலைத் தளத்தில் தகவல்களை பகிர்ந்துகொண்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சு தற்போது மாணவரின் குடும்பத்தோடு தொடர்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

மாணவர் தொடர்பான மற்ற விபரங்களை அது வெளியிடவில்லை.

அவுஸ்திரேலியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையே எந்த அரசதந்திர உறவும் இல்லை. அதனால் அவுஸ்திரேலியா வட கொரியாவில் உள்ள சுவீடன் தூதரகத்தின் உதவியை நாடியுள்ளது.

Fri, 06/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை