சுட்டுவீழ்த்தப்பட்ட விமானம்: நான்கு பேர் மீது குற்றச்சாட்டு

கிழக்கு உக்ரைனில் 2014ஆம் ஆண்டு ஜூலை மாதம் விழுந்து நொறுங்கிய மலேசிய விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக நான்கு பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இகோர் கிர்கின், செர்கெய் டுபின்ஸ்கி மற்றும் ஒலெக் புல்டோவ் ஆகிய மூன்று ரஷ்யர்களும் லியோனிட் கார்சென்கோ என்னும் ஓர் உக்ரைன் நாட்டவரும் விமானத்தை எரிகணைகளை கொண்டு சுட்டு வீழ்த்தி, பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் 298 பேரை கொலை செய்ததாக நெதர்லாந்து விசாரணையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பான நீதிமன்ற வழக்கு நெதர்லாந்தில் 2020 மார்ச்சில் ஆரம்பமாகவுள்ளது. ஆம்ஸ்டார்டாமில் உள்ள ஷிபோல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட எம்.ஹெச் 17 விமானம் அடுத்த நாள் மலேசிய தலைநகர் கோலாலம்பூரை அடைய இருந்தது.

புறப்பட்ட சில மணி நேரங்களில் ரஷ்ய – உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 50 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது தொடர்பை இழந்தது.

Fri, 06/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை