அமெ. வீசாவுக்கு சமூகதள கணக்கு விபரம் சேகரிப்பு

அமெரிக்க அரசின் புதிய விதிமுறைகளின்படி அந்நாட்டிற்கு பயணிக்க விசா கோரி விண்ணப்பிக்கும் கிட்டத்தட்ட அனைத்துவித விண்ணப்பதாரர்களும் இனி தங்களது சமூக ஊடக கணக்குகள் குறித்த விபரங்களை அளிக்க வேண்டி ஏற்படும்.

அமெரிக்காவுக்கு பயணிக்க விசா கோரி விண்ணப்பிப்பவர்கள் தங்களது சமூக ஊடக கணக்குகள் குறித்த விபரங்களோடு, கடந்த ஐந்தாண்டுகளாக பயன்படுத்திய மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்களை அளிக்க வேண்டும் என்று அந்த புதிய விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்த புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டபோது, இதன் காரணமாக ஓராண்டிற்கு 14.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. அரசு ரீதியான மற்றும் உத்தியோகபூர்வ விசா விண்ணப்பங்களுக்கு இந்த புதிய விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

ஆனால், அமெரிக்காவுக்கு தொழில்வாய்ப்பு அல்லது கல்வி தொடர்பாக செல்பவர்களுக்கு இதிலிருந்து விலக்கு இல்லை.

முன்னதாக பயங்கரவாத குழுக்களின் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் உள்ளவர்களே இவ்வாறான தரவுகளை கையளிப்பதற்கு அமெரிக்கா நிபந்தனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Mon, 06/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை