தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை வாங்கும் நியூசிலாந்து அரசாங்கம்

நியூஸிலந்து அரசாங்கம் தடைசெய்யப்பட்டுள்ள ஆயுதங்களை உரிமையாளர்களிடமிருந்து மீட்டுக்கொள்ள புதிய 6 மாதத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

அதற்குச் சுமார் 136 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆயுதத்தின் விலையில் 95 வீதம் வரை உரிமையாளர்களுக்கு ஈடுசெய்யும் தொகையாக வழங்கப்படும்.

டிசம்பர் 20ஆம் திகதிக்குள் உரிமையாளர்கள் தடைசெய்யப்பட்டுள்ள ஆயுதங்களை ஒப்படைக்கவேண்டும். அது தொடர்பிலான துப்பாக்கித் திருத்தச் சட்டமூலம் கடந்த ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

புதிய தடை தானியங்கித் துப்பாக்கிகளைப் பெரும்பாலும் இலக்காகக் கொண்டுள்ளது.

அத்தகைய சுமார் 14,000 துப்பாக்கிகள் புதிய சட்டத்தின்கீழ் மீட்டுக்கொள்ளப்படும் என்று பொலிஸார் எதிர்பார்க்கின்றனர்.

கடந்த மார்ச் மாதம் கிரைஸ்ட்சேர்ச்சில் இரு பள்ளிவாசல்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 51 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்தே நியூசிலாந்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Fri, 06/21/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை