உலகக் கிண்ணப் போட்டிகள்: மைதானங்களை ஒதுக்கியதில் இலங்கை அணிக்கு அநீ்தி

உலகக்கிண்ணப் போட்டிகளில் மைதானங்களை ஒதுக்குவதில் இலங்கை அணிக்கு அநீதியிழைக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை பக்கச் சார்பற்ற விசாரணை நடத்த வேண்டுமென அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர்,இதைத் தெரிவித்துள்ளார்.

அவர் இங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்:

விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம். இலங்கை அணியில் அதிக பிரச்சினைகள் உள்ளன. கடந்த காலத்தில் கிரிக்கெட் அணிக்குள் வந்தவர்கள் தமக்குத் தேவையானவர்களை அணிக்குள் உள்வாங்கி இலங்கை கிரிக்கெட்டை நாசமாக்கியுள்ளனர்.

இம்முறை இலங்கை அணிக்கு வழங்கப்பட்டுள்ள மைதானங்கள் தொடர்பில் கவலையளிக்கிறது. இங்கு அசாதாரணமொன்று நிகழ்ந்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை இது குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்த வேண்டும். அவ்வாறான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தக்கோரும் வகையில் இலங்கை கிரிக்கெட் சபையில் அனுபவம் வாய்ந்தவர்கள் உள்ளனரா எனத் தெரியவில்லை. தற்போது நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு குதிரை பந்தையத்துக்குச் செல்ல மாத்திரமே தெரியும்.

அதனால் விளையாட்டு அமைச்சராவது சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு இதுகுறித்து தெரிவித்து, சாதாரண விசாரணையொன்று நடத்த நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 06/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை