சர்வதேச அளவில் விமான கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு

அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தகப் போர், அதிகரித்துவரும் எண்ணெய் விலை ஆகியவற்றால் விமான நிறுவனங்களின் இலாபம் இந்த ஆண்டு தொடர்ந்து குறையக்கூடும் என்று உலக விமானப் போக்குவரத்து அமைப்பு கூறியுள்ளது.

2019 ஆம் ஆண்டு விமான நிறுவனங்களின் ஒட்டுமொத்த நிகர இலாபம் 35.5 பில்லியன் டொலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அது 28 பில்லியன் டொலருக்குக் குறைக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கான செலவு, எண்ணெய் விலை, கட்டமைப்புச் செலவு ஆகியவை அதிகரித்திருப்பது அதற்குக் காரணமாக கூறப்படுகிறது.

அமெரிக்க–சீன வர்த்தகப் போரால் விமானச் சரக்குப் போக்குவரத்து குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்படும்் அதே சமயம் பயணிகள் போக்குவரத்திலும் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உலக விமானப் போக்குவரத்து அமைப்பின் தலைவர் தெரிவித்தார். அதனால் விமானக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

தென் கொரியத் தலைநகர் சோலில் உலக விமான நிறுவனங்களுக்கான சந்திப்பு நடைபெறுகிறது.

Mon, 06/03/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை