முப்பது வருடங்களாக தீர்த்து வைக்கப்படாத பிரச்சினையை விரைவில் நிறைவேற்றுவேன்

கல்முனையில் பொதுபலசேனா தலைவர் ஞானசார தேரர்

கடந்த முப்பது வருடங்களாக 13 அமைச்சர்களினால் தீர்த்துவைக்கப்படாத இப்பிரச்சினையை மிக விரைவில் தீர்த்துத்தருவேன். நம்புங்கள். உண்ணாவிரத்தத்தைக் கைவிடுங்கள்.

என நேற்றுமுன்திம் பொதுபலசேனா அமைப்பின் தலைவர் வண.கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில்:

உங்களது தியாகத்தைமதிக்கிறோம். 30 வருடங்கள் தீர்க்கப்படாமல் நீதிகிடைக்காமல் இருந்தமையினால் உண்ணாவிரத்ததில் இறங்கியுள்ளீர்கள். இது போராட்டத்தின் இறுதிவடிவம்.

அத்தனை பிரச்சினைக்கும் காரணம் எமது அரசியல்வாதிகள் என்பதனை நாம்மறந்து விடக்கூடாது. அவர்களே இதற்குப் பொறுப்புக் கூறவேண்டும்.

இந்தப் பிரச்சினையால் இரு சமுகங்கள் ஒருவரையொருவர் சந்தேகக் கண்கொண்டு நோக்கும்நிலை வந்துள்ளது.

ஒரு நாட்டில் ஒரு சட்டம்தான் இருக்கமுடியும். அப்படியே சலுகைகளும். ஒரேவீதியில் ஒருபக்கம் சொர்க்கமும் மறுபக்கம் நரகமும் இருக்கமுடியாது.

அரசியல்வாதிகளின் இருவேடங்களை கலைக்க வேண்டும். எமக்கு அரசியல் நோக்கமோ தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலோ இல்லை. ஒரு தேசிய நிகழ்ச்சி நிரலினூடாகவே பயணிக்கிறோம்.

எமது தேசியகீதத்தில் கூறப்பட்டது போன்று இந்த நாட்டிலுள்ள அனைவரும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள். அனைவரும் இணைந்தே எந்தப் பிரச்சினையானாலும் தீர்க்கவேண்டும். முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினையென்றாலும் நான் அங்கு நிற்பேன்.

இப்பிரச்சினை 30 வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டுவந்ததன் விளைவே இது. அதனை இன்னும் தொடர அனுமதிக்கமுடியாது. விரைவாக தரமுயர்த்தப்பட்ட செய்தியோடு வந்து உங்களுக்கு வடையும் பலகாரமும் தருவேன் என்றார்.

அவரது உரையின் பின்னர் உண்ணாவிரதிகளின் உடல்நலம்வேண்டியும் இப் பிரச்சினை சுமுகமாக தீரவும் 10 நிமிடங்கள் அனைவரும்இணைந்து 'பிரீத்' ஓதப்பட்டது.

'நான் விசம் குடிப்பேன்.'

உண்ணாவிரதி வண.ரண்முத்துகல சங்கரத்னதேரர் பேசுகையில்:

இந்த வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படும் வரை நான் இந்த இடத்திலேயேதான் உங்களோடு இருப்பேன்.

எமது தலைவர் வண.ஞானசார தேரருக்கு நன்றிகள். அவரை மதித்து நீராகாரம் மட்டும் குடிப்பதாக முடிவெடுத்துள்ளோம்.

ஆனால் அவர் கூறியதுபோன்று விரைவில் இந்தப் பிரச்சினை தீக்கப்படாவிட்டால் நான் மறுநாளே விசம் குடிப்பேன்.

ஆனால் எமக்கெதிராக முஸ்லிம்கள் சிலர் நல்லா சாப்பிட்டுவிட்டு வீட்டில் உறங்கிவிட்டு சத்தியாக்கிரகம் என்று நாடகம் நடிக்கிறார்கள். அவர்கள் மீது எனக்கு ஒரு கோபமுமில்லை.

அவர்களுக்கும் இப்படியொரு கஸ்டம் தேவை வந்தால் நான் தான் முதலில் இருப்பேன்.எமது உண்ணாவிரதிகள் அனைவருக்கும் பாதுகாப்புத் தருரப்படவேண்டும் என்றார்.

(காரைதீவு குறூப் நிருபர் )

Mon, 06/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை