சிரியாவில் தாக்குதலை நிறுத்த ரஷ்யாவுக்கு டிரம்ப் அழுத்தம்

சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களை கொல்வதை நிறுத்துங்கள் என ரஷ்யா, சிரியா, ஈரான் அரசுகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாதுக்கு ஆதரவாக சிரிய மற்றும் ரஷ்ய படைகள் இத்லிப் மாகாணத்தில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. ஜிஹாதிக்கள் அதிக்க நிறைந்த பகுதியான அங்கு அண்மையில் சிரிய மற்றும் ரஷ்ய படைகள் குண்டுவீசியதில் பொதுமக்கள் உட்பட பலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் இது குறித்து டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது “இத்லிப் மாகாணத்தில் ரஷ்யா, சிரியா, ஈரான் ஆகிய நாடுகள் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளன. இதனால் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டனர். உலகம் இந்த படுகொலைகளை பார்த்து கொண்டு தான் இருக்கிறது. என்ன காரணத்திற்கு இதனை செய்கிறீர்கள், இதன் மூலம் உங்களுக்கு என்ன கிடைத்தது, நிறுத்துங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tue, 06/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை