உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான முழு பொறுப்பையும் ஜனாதிபதி ஏற்க வேண்டும்

உயிர்த்த ஞாயிறுதினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முழுமையான பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே ஏற்கவேண்டுமென டிஜிற்றல் உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.  

2015ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக களமிறக்கி, நாம் செய்த மாபெரும் தவறுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் அவர் கூறியுள்ளார்.  

நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் கூறியதாவது:  

மக்களின் இறையாண்மைக்கு மதிப்பளிக்காது ஜனாதிபதியும் பிரதமரும் இரண்டு துருவங்களாக உள்ளனர். சட்ட விரோதமான அரசாங்கத்தை அமைத்து தேசிய அரசாங்கத்தை சீர்குலைத்தது ஜனாதிபதியே.  

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு ஜனாதிபதியே முழுமையாகப் பொறுப்புக் கூற வேண்டும்.

நிறைவேற்று அதிகாரமும் அவரிடமே உள்ளது. அவர்தான் பாதுகாப்பு அமைச்சர். சட்டம், ஒழுங்கு அமைச்சரும் அவரே. எனவே, ஜனாதிபதியே பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் முழுமையான பொறுப்புக்கூற வேண்டியவர்.  

2015ஆம் ஆண்டு பொது வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை களமிறக்கி மாபெரும் தவறை செய்துவிட்டோம். அதற்காக மக்களிடம்  மன்னிப்புக் கோருவதாகவும் அவர் தெரிவித்தார்.

(சுப்பிரமணியம் நிஷாந்தன்)  

Thu, 06/20/2019 - 10:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை