தற்கொலை செய்ய விரும்பினேன்

மிக்கி ஆர்தர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், தான் தற்கொலை செய்து கொள்ள விரும்பியதாக அதிர்ச்சி அளிக்கும் விதமாக பேசியுள்ளார்.

உலக கிண்ண கிரிக்கெட் கடந்த 30ம் திகதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கடந்த ஜூன் 16ம் திகதி இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதி அமோக வெற்றி பெற்றது.

இதனையடுத்து பாகிஸ்தான் அணி வீரர்கள் விளையாடிய விதம் ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. குறிப்பாக போட்டியின் நடுவே பாகிஸ்தான் தலைவர் சர்பிராஸ் அகமது கொட்டாவி விட்டது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களும், முன்னாள் வீரர்களும் கடுமையாக சர்பிராசை விமர்சித்தனர். மேலும் பாகிஸ்தான் வீரர்களும் கடும் கவலையில் இருந்தனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணி கடந்த ஞாயிற்றுக் கிழமை தென் ஆபிரிக்காவை வீழ்த்தியது. அதன் பின்னர் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த ஜூன் 16ம் திகதி இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததையடுத்து, நான் தற்கொலை செய்ய விரும்பினேன். இதுபோன்று மோசமாக விளையாடியது பாகிஸ்தான் அணிக்கு முதன்முறை என்பது உங்களுக்கு தெரியும்.

எப்படியோ துரிதமாக நடந்து முடிந்து விட்டது. ஒரு முறை தோல்வியுற்றீர்கள். மீண்டும் தோல்வி அடைந்தீர்கள். இது உலக கிண்ணத்தில். ஊடகத்தின் கண்காணிப்பை அதிகம் பெறும் மற்றும் பொது மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரிக்கும்.

வாழ்ந்தே தீரவேண்டும் எனும் கட்டாயத்தில் உள்ளீர்கள் என வீரர்களிடம் என் கவலையை கூறினேன். அதன்பின்னர் தென் ஆபிரிக்காவை பாகிஸ்தான் அணி வீரர்கள் வீழ்த்தினார்கள். இனி நாங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெறவே விரும்புகிறோம்.

இது குறித்த செய்திகள் வெளியானதும் பலரும், மிக்கியின் பொறுப்புணர்வை பாராட்டி வருகின்றனர். இருப்பினும் இவர் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்தவர் என்பதால் இந்த கருத்துகள் சரியானது அல்ல எனவும் சில ரசிகர்கள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Wed, 06/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை