வடக்கில்: தவறவிடப்பட்ட தொண்டராசிரியர்கள் யாழில் உண்ணாவிரத போராட்டம்

வடக்கு கிழக்கில் எதிர்வரும் 27ஆம் திகதி 372 தொண்டராசியர்களுக்கு நியமனம் வழங்கப்படவுள்ள நிலையில், அதில் தவறவிடப்பட்ட வடமாகணத்தை சேர்ந்த தொண்டராசிரியர்கள் ஒரு மாத காலத்துக்குள் தமக்கான நியமனம் வழங்க வேண்டும் என தெரிவித்து உண்ணாவிர போராட்டத்தை ஆரம்பித்தனர்.

வடக்கு மாகாணத்தை சேர்ந்த 172 தொண்டராசிரியர்களே நேற்றைய தினம் இவ் உண்ணாவிரத போராட்டத்தை வடமாகாண கல்வியமைச்சின் முன்பாக ஆரம்பித்தனர்.

இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்ததாவது,

எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள நியமனத்திற்கு தேவையான, அதாவது சுற்று நிருபத்தில் கேட்கப்பட்ட சகல ஆவணங்களும் எங்களிடமும் இருக்கின்றது. ஆனால் எமக்கான நியமனம் தொடர்பில் எந்தவிதமான அறிவித்தலும் வரவில்லை.

இந் நிலையில் கால நீடிப்பு வழங்காது நிரந்தர நியமனத்தை விரைவில் வழங்கவேண்டும், தொண்டராசிரியர் பட்டியலை மத்திய கல்வி அமைச்சிற்கு உடனடியாக அனுப்ப வேண்டும். தவறவிடப்பட்ட தொண்டராசியர் பட்டியலை காட்சிப்படுத்த வேண்டும். தவறவிடப்பட்ட தொண்டராசிரியர்களை அமைச்சரவை பத்திரத்திற்குள் உள்ளடக்க வேண்டும்.

ஒரு மாத காலத்திற்குள் எமக்கு நேர்முகத் தேர்வு நடைபெற வேண்டும். ஒரு மாத காலத்திற்குள் எமக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்பதை எழுத்து மூலமாக தர வேண்டும்.

ஆகியவற்றை வலியுறுத்தியே இப் போராட்டதை முன்னெடுத்து வருகின்றோம். எமது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர் போராட்டத்தை முன்னெடுப்போம் என்றனர்.

நல்லூர் விசேட நிருபர

 

Tue, 06/25/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக