கல்முனை உப-பிரதேச செயலகத்தை தரமுயர்த்த நடவடிக்ைக வேண்டும்

கல்முனை உப பிரதேச செயலகத்தினை முழுமையான அதிகாரத்துடன் தரமுயர்த்த வேண்டும் என அமைச்சர் செந்தில் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

அம்பாறை மாவட்டத்தின் 20 பிரதேச செயலகப் பிரிவுகளில் கல்முனை உப பிரதேச செயலகம் மாத்திரம் தரமுயர்த்தப்படாத நிலையில் உள்ளது. யுத்தக்காலங்களில் தரமுயர்த்தபடாமைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. எனினும் அதை இன்று ஏற்றுக்கொள்ள முடியாது. யுத்தம் முடிந்து பத்து வருடகாலமாகியும் கூட கல்முனை உப பிரதேச செயலகம் முழுமையான அதிகாரத்துடன் தரமுயர்த்தப்படாமைக்கான ஆக்கப்பூர்வமான காரணங்கள் எதுவும் இல்லாத பட்சத்தில் இது ஒரு அரசின் பாரபட்ச செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது. நாட்டின் நிலைமைகளை கருத்திற்கொண்டு கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும்.

கல்முனை நகரைச் சுற்றியுள்ள ஏனைய பிரதேச செயலகங்கள் தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில் கல்முனை உபபிரதேச செயலகம் மாத்திரம் தரமுயர்த்தப்படவில்லை. பல போரட்டங்கள் மேற்கொண்ட போதும் அரசு அதை செவிசாய்க்கவில்லையென்பது ஏற்றுக்கொள்ளக் கூடியவிடயம் அல்ல. அரசாங்கம் என்பது மக்களின் குறைகளைத் தீர்த்து மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவது. எனவே உடனடியாக அரசு தலையிட்டு தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Sat, 06/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை