அரச வங்கியில் 'தீ' ஆவணங்கள் நாசம்; களுத்துறையில் சம்பவம்

களுத்துறையில் அரசாங்க வங்கியொன்றில் நீண்ட காலத்திற்கு பின்னர் கணக்காய்வு நடவடிக்கைகள் நடைபெற்றுவரும் நிலையில் நேற்று அதிகாலை தீப்பற்றியதன் காரணமாக கணக்காய்வுக்கு தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் பல எரிந்து நாசமாகியுள்ளது.

இதனால் முக்கியமான கணக்காய்வு ஆவணங்கள் பெருமளவில் தீயினால் எரிந்து நாசமகியுள்ளது. அதிகாலை 4 மணிக்கும் 6 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த தீ விபத்து இடம்பற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் வங்கியின் அங்கத்தவர்கள் பெரும் குழப்பத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

குறித்த வங்கி நீண்ட காலமாக பல்வேறு ஊழலுக்கு மத்தியில் இயங்கிவரும் நிலையிலேயே அண்மையில் கணக்காய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது. இத்தகையதொரு சூழ்நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றமை மக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ தினத்தன்று வங்கியில் உள்ள பணப் பெட்டகத்தில் பணம் ஏதும் இருந்திக்கவில்லை, கதவு உடைக்கப்படாத நிலையில் கதவுக்கு போடப்பட்டிருந்த பூட்டு மட்டும் காணாமல் போயுள்ளது. மேலும் வங்கிக்கு அண்மித்த வீடொன்றில் உள்ள சீ.சீ.டி.வி இணைப்பும் சந்தேகத்துக்கு இடமான முறையில் துண்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

களுத்துறை சுழற்சி நிருபர்

Tue, 06/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை