மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பாண்ட் வாத்தியக் கருவிகள்

கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் இசை ஆற்றலை வளர்க்கும் முகமாக சமூகசேவைகள் திணைக்களத்தினால் பாண்டுவாத்தியக் கருவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது. இதில் உவெஸ்லிக் கல்லூரியின் அதிபர் வி.பிரபாகரன், ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டு பாண்ட் வாத்தியக் கருவிகளைப் பெற்றுக்கொண்டனர்.

சமூகசேவைகள் திணைக்களத்தினால் ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டன. கல்முனை கல்வி வலயத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் அதிகம் கல்வி கற்கும் பாடசாலையாக கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை அமைந்துள்ளது. இங்கு 54 மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து விசேட கல்விப் பிரிவு இங்கு இயங்கிவருகின்றது. நான்கு வகையான மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவற்றில் மூளை வளர்ச்சி குறைந்த மாணவர்கள், வாய்பேசமுடியாத, காது கேட்கமுடியாத மாணவர்கள், மெல்லக்கற்கும் மாணவர்கள், பிறப்புரிமையியல் குறைபாடு உடைய மாணவர்கள் என நான்கு வகையான மாணவர்கள் கற்பதாக கல்லூரி முதல்வர் மேலும் தெரிவித்தார்.

 

பாண்டிருப்பு தினகரன் நிருபர்


பாண்டிருப்பு தினகரன் நிருபர்
Tue, 06/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை