பாக். முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி ஸர்தாரி கைது

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி ஸர்தாரி ஊழல் எதிர்ப்பு முகமையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2008 முதல் 2013 வரை பாகிஸ்தானின் 11ஆவது ஜனாதிபதியாக இருந்த ஆசிப் அலி ஸர்தாரியும், அவரது சகோதரியும் அதிகமான போலி வங்கிக் கணக்குகள் வைத்து மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

பல இலட்சம் கோடி டொலர் மோசடியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கில் பிணையை நீட்டிக்க பாகிஸ்தான் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பொறுப்பேற்றது முதல் ஊழல் எதிர்ப்புக் கொள்கையின் கீழ் பல அரசியல் பிரமுகர்கள் கைதாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அரசியலில் சர்ச்சைக்குரியவராக இருந்து வரும் ஸர்தாரி 1990கள் மற்றும் 2000களில் பல தடவைகள் சிறை அனுபவித்துள்ளார். அரச ஒப்பந்தங்களுக்கு தரகுப் பணம் பெறுவதாக பிரபலம் பெற்ற அவருக்கு ‘10 வீதிம்’ என்று பெயரும் உள்ளது.

Wed, 06/12/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை