ஈரான் தலைவர்கள் மீது டொனால்ட் டிரம்ப் சாடல்

ஈரான் தலைவர்களுக்கு அவர்களுடைய மக்களைப் பற்றிக் கவலை இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் டிரம்ப் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “ஈரான், அதன் மக்களுக்கு சரியானவற்றைச் செய்ய வேண்டும்.

இதில் பிரச்சினை என்னவென்றால் ஈரானின் மக்கள் குறித்து அந்நாட்டுத் தலைவர்கள் அக்கறை கொள்கிறார்கள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவர்கள் உண்மையில் அக்கறை கொள்கிறார்கள் என்றால் அதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். இல்லை, அவர்கள் மீது மட்டுமே அக்கறை கொள்கிறார்கள் என்றால் அவர்கள் சுய நலவாதிகள்” என்று தெரிவித்துள்ளார்.

அணு ஆயுத சோதனை தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், கடந்த மாதம் சவூதி அரேபியாவுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டியது.

தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

ஈரான் மீதும் அதன் முக்கிய தலைவர்கள் மீதும் புதிய பொருளாதாரத் தடையை டிரம்ப் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Fri, 06/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை