எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம்

அமெரிக்காவை எச்சரிக்கின்றது வட கொரியா

சியொல்( ராய்ட்டர்) -இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையில் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஆபத்தான நிலையில் இருப்பதாக வட கொரியா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அணுஆயுத செயற்பாடுகளை கைவிடவேண்டும் என்பதற்காக தவறான விதத்தில் அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக வடகொரிய அரச செய்தி ஸ்தாபனமான KCNA தெரிவித்துள்ளது.

டிரம்ப் மற்றும் கிம் முதன் முதலில் சிங்கப்பூரில் சந்தித்த பின்னர், ஒரு புதிய உறவை நோக்கி வேலை செய்வதற்கு உறுதியளித்த நான்கு அம்ச கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்ட, கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குள், அமெரிக்கா ”ஒருதலைப்பட்ச அணுவாயுத ஒப்படைப்பை வலியுறுத்தும் அதன் கொள்கையை கைவிடவில்லை என்றால், ஒப்பந்தம் தொடர்ந்தும் நீடித்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென்று” பெயர் குறிப்பிட விரும்பாத வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

“காலம் தாழ்த்தாமல், புதியதொரு கோரிக்கையை அமெரிக்கா முன்வைக்காவிட்டால், இரு நாட்டுக்குமிடையிலான ஒப்பந்தம் செல்லுபடியற்றதாகவே கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

“எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு. அமெரிக்கா உடனடியாக அதன் நிலைப்பாட்டை மாற்றாவிட்டால் வருந்தநேரும் என்றும் அந்த பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி மேலும் தெரிவித்தார்.

சர்வதேச பொருளாதார தடைகளை அகற்றுவதற்காக, போதிய அணுவாயுதங்கள் அல்லது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை கையளிக்க கிம் தவறிவிட்டதாக ட்ரம்ப் அறிவித்ததால் ஹனோய் உச்சமாநாடு தோல்வியடைந்தது.

இருப்பினும் அமெரிக்கா ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமானால். ஓப்பந்தப் பிரகாரம் செயற்படத் தயாராக உள்ளதாகவும் வட கொரியா தெரிவித்துள்ளது.

Thu, 06/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை