மூன்று பதில் அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்

மூன்று பதில் அமைச்சர்களுக்கான நியமனங்கள் ஜனாதிபதியினால் நேற்று வழங்கப்பட்டுள்ளது.

நேற்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் நகர திட்டமிடல், நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சரான லக்கீ ஜயவர்தன நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி பதில் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்..

கைத்தொழில், வர்த்தக விவகார பிரதியமைச்சர் புத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி,

தொழிற்பயிற்சி, திறன் அபிவிருத்தி பதில் அமைச்சராகவும் பெற்றோலிய வள அபிவிருத்தி பிரதியமைச்சர் அனோமா கமகே, நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி பதில் அமைச்சராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அண்மையில் முஸ்லிம் அமைச்சர்கள் சிலர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்துள்ள நிலையில் அந்தவெற்றிடங்களை நிரப்பும் வகையிலேயே பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.முஸ்லிம் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், கபீர் ஹசீம், ரிசாத் பதியுதீன் ஆகிய அமைச்சர்களின் பதவிகளுக்கே பதில் அமைச்சர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

Tue, 06/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை