பந்துவீச்சில் முதலிடத்தில் முகமது அமிர்: துடுப்பாட்டத்தில் சகிப் அல்-ஹசன் முதலிடம்

உலகக் கிண்ண கிரிக்கெட் பாகிஸ்தான் இடது கை சுழற்பந்து வீச்சாளர் முகமது அமிர் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.

பாகிஸ்தான் அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர். உலகக் கிண்ணத்துக்கான முதற்கட்ட பாகிஸ்தான் அணியில் அமிருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மீது விமர்சனம் எழுந்தது.

இதனால் ஐசிசி-யின் காலக்கெடுவுக்கு முன் முகமது அமிர் அணியில் சேர்க்கப்பட்டார். துடுப்பாட்டவீரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட இங்கிலாந்தில் முகமது அமிர் சிறப்பாக பந்து வீசி அசத்தி வருகிறார். இதுவரை பாகிஸ்தான் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் அமிர் 15 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்சர் 6 போட்டிகளில் 15 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளார். அவுஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 6 போட்டிகளில் 15 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 3-வது இடத்தில் உள்ளார்.

இந்திய அணியை பொறுத்தவரையில் சாஹல் 4 போட்டிகளில் 8 விக்கெட்டும், பும்ரா 7 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

ஓட்டக் குவிப்பில் பங்களாதேஷ் வீரர் சகிப் அல் -ஹசன் 6 போட்டியில் 476 ஓட்டங்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளார். டேவிட் வோர்னர் 447 ஓட்டங்களுடன் 2-வது இடத்திலும், ஜோ ரூட் 424 ஓட்டங்களுடன் 3-வது இடத்திலும், ஆரோன் பிஞ்ச் 396 ஓட்டங்களுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.

கேன் வில்லியம்சன் 373 ஓட்டங்களுடன் ஐந்தாவது இடத்திலும், ரோகித் சர்மா 320 ஓட்டங்களுடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.

Wed, 06/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை