அத்துரலியே ரதன தேரர் சிகிச்சையின் பின் வெளியேறினார்

பாராளுமன்ற உறுப்பினர் வண. அத்துரலிய ரதன தேரர் சிகிச்சையின் பின்னர் நேற்று கண்டி வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார்.

கண்டி வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுக்கொண்ட அவர் தனது சுயவிருப்பின்பேரில் வைத்தியசாலையை விட்டு வெளியேறியிருப்பதாக அவரது ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய ரதன தேரர் பேராதனையிலுள்ள பெளத்த விகாரையொன்றுக்கு சென்றிருப்பதாகவும் அங்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஓய்வெடுத்த பின்னர் கொழும்பு திரும்புவாரென்றும் அவரது ஊடகப் பிரிவு கூறியது.

மேல் மாகாண ஆளுநராகவிருந்த அசாத்சாலி, கிழக்கு மாகாண ஆளுநரான ஹிஸ்புல்லா மற்றும் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் ஆகிய மூவரையும் பதவி

விலகக் கோரி பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் நான்கு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார். கடந்த திங்கட்கிழமை மேற்படி ஆளுநர்கள் தமது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதியிடம் ஒப்படைத்ததையடுத்து ரதன தேரர் எம்.பி தனது போராட்டத்தை நிறைவு செய்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் கண்டி பேராதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

லக்ஷ்மி பரசுராமன்

 

Thu, 06/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை