கருணை, நல்லிணக்கம் போன்ற நற்பண்புகளை மனதிலிருத்த வேண்டிய தருணம் இதுவே

நாம் பெற்றுக்கொண்டுள்ள உன்னத சமய கலாசாரத்தின் மூலாதாரமாக கருதப்படும் கருணை, அமைதி, நல்லிணக்கம் ஆகிய நற்பண்புகளை சிந்தையில் இருத்த வேண்டிய தருணம் இதுவாகும். ஒட்டுமொத்த இலங்கையர்களினதும் பொசன் பௌர்ணமி தின உறுதிமொழியாக அமைய வேண்டியதும் இதுவேயாகும். இந்த ஆன்மீக மலர்ச்சியையும்  வளமான கலாசாரத்தையும் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பொசன் தின செய்தியில் தெரிவித்துள்ளார்.

இன்று பொசன் பௌர்ணமி தினமாகும். நாட்டிலுள்ள அனைத்து மக்களும் இவ்விசேட தினத்தை அனுஷ்டிக்கும் வேளையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு விசேட பொசன் தின செய்தியை வெ ளியிட்டுள்ளார் இந்த செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தனத[ செய்தியில் மேலும் தெரிவிக்ைகயில்.,

மஹிந்த தேரரின் இலங்கை விஜயம் இடம்பெற்று 2326 வருடங்கள் பூர்த்தியாகும் பொசன் பௌர்ணமி தினம் இன்றாகும். இலங்கையில் பௌத்த மதம் ஸ்தாபிக்கப்பட்ட தினமாகவும் பௌத்த கலாசாரம் இந்நாட்டில் வேரூன்ற காரணமாக அமைந்த நாளாகவும் உயரிய தேசிய பூஜைக்குரிய நாளாகவும் இன்றைய தினம் பௌத்தர்களால் போற்றப்படுகின்றது.

பலவிதமான சம்பிரதாய வழிபாடுகள், நம்பிக்கைகள், அனுஷ்டானங்களில் ஈடுபட்டுவந்த இலங்கையர்களுக்கு மஹிந்த தேரரின் வருகையினாலேயே அஹிம்சையை அடிப்படையாகக் கொண்ட முறையான சமய நெறி கிடைக்கப் பெற்றது. இது சமய வாழ்க்கைக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் புதிய நோக்கங்களை ஏற்படுத்திய வரலாற்று நிகழ்வாகும்.

புனித திரிபீடகம் மாத்திரமன்றி எழுத்துக்கலை, கட்டிடக்கலை, சிற்பக் கலை, தூபி நிர்மாணக் கலை ஆகிய அனைத்து துறைகளும் எழுச்சி பெற்று தேசிய கலாசாரத்தில் அர்த்த புஷ்டியானதொரு மாற்றம் ஏற்படுவதற்கு மஹிந்த தேரரின் பொசொன் பௌர்ணமி தின விஜயமே காரணமாக அமைந்தது.

பொசன் பௌர்ணமி தினத்தன்று நாம் பெற்ற இந்த உன்னத சமய கலாசாரத்தின் மூலாதாரமான கருணை, அமைதி, நல்லிணக்கம் ஆகிய நற்பண்புகளை சிந்தையில் இருத்த வேண்டிய தருணம் இதுவாகும். ஒட்டுமொத்த இலங்கையர்களினதும் பொசன் பௌர்ணமி தின உறுதிமொழியாக அமைய வேண்டியதும் அதுவேயாகும். அந்த ஆத்மீக மலர்ச்சியையும்  வளமான கலாசாரத்தையும் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும்.

அதற்கான ஆற்றலும் அறிவும் கிட்டும் பொசன் பௌர்ணமி தினமாக இன்றைய தினம் அமைய வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.  

Sun, 06/16/2019 - 09:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை