ரஷ்ய ஏவுகணைகளை வாங்குவதில் துருக்கிக்கு அமெரிக்கா காலக்கெடு

அமெரிக்க போர் விமானங்கள் மற்றும் ரஷ்யாவின் விமான எதிர்ப்பு ஏவுகணை இரண்டில் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு வரும் ஜூலை இறுதி வரை துருக்கிக்கு அமெரிக்கா கெடு விதித்துள்ளது.

அமெரிக்க பதில் பாதுகாப்புச் செயலாளர் பட்ரிக் ஷனஹன் இந்த கெடு விதிக்கும் கடிதத்தை துருக்கி பாதுகாப்புச் செயலாளர் ஹுலுசி அகருக்கு வழங்கியுள்ளார்.

அந்த கடிதத்தில், அமெரிக்காவின் எப் –35 ரக போர் விமானம் மற்றும் ரஷ்யாவின் எஸ் –400 ஏவுகணை அமைப்பு இந்த இரண்டையும் துருக்கியால் வைத்திருக்க முடியாது என்று பட்ரிக் குறிப்பிட்டுள்ளார்.

நேட்டோ கூட்டாளிகளான இந்த இரு நாடுகளும், எஸ் –400 ஏவுகணை அமைப்புமுறை காரணமாக பல மாதங்களாக முறுகலில் உள்ளன.

ரஷ்யாவின் ஏவுகணை தடுப்பு அமைப்பு, நேட்டோ பாதுகாப்பு அமைப்பு முறைகளுக்கு எதிராகவும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் விளங்குவதாக அமெரிக்கா வாதிடுகிறது. மேலும், ரஷ்யாவின் எஸ் –400 ஏவுகணை அமைப்பு முறைக்கு பதிலாக அமெரிக்காவின் பேட்ரியாட் போர்விமான ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு முறையை வாங்குமாறு துருக்கியை வலியுறுத்துகிறது.

அதிகளவிலான தன்னிச்சையான பாதுகாப்பு கொள்கைகளை கொண்டுள்ள துருக்கி, அமெரிக்காவின் 100 எப் –35எஸ் ரக போர் விமானங்களை வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதுமட்டுமின்றி அதன் எப் –35 போர் விமானத் திட்டத்தில் அதிகளவிலான முதலீடுகளை குவித்துள்ளது. அந்த விமானத்துக்கு தேவையான 937 உதிரி பாகங்களை துருக்கி நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.

Mon, 06/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை