சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இலங்கைக்கு உதவ ஜப்பான் தயார்

சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகள், ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு ஜப்பான் தயாராகவுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் டோசிகோ அபே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பான்

வெளிவிவகார இராஜாங்க அமைச்சருக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் அலரிமாளிகையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பிலே ஜப்பான் வௌிநாட்டமைச்சர் இவ்வுறுதி மொழியை வழங்கினார்.

இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையில் பாதுகாப்பு உடன்படிக்கை கைச்சாத்திடுவது தொடர்பிலும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப் பட்டது.

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஜப்பான் வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு இதன்போது பிரதமர், நன்றி தெரிவித்ததுடன், இந்தியா, மாலைதீவு மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடைமுறைப்படுத்த எதிர்ப்பார்த்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பில் இந்திய பிரதமருடனான சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்தும் ஜன்பான் வௌிநாட்டமைச்சர் பிரதமருக்கு விளக்கினார். இலங்கையிலுள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் பல்வேறு துறைகளில் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கூட்டாக அபிவிருத்தியை முன்னெடுப்பது தொடர்பிலும் கருத்துகள் பரிமாறப்பட்டிருந்தன.

இச்சந்திப்பில், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகிர சுகியாமா, தூதுரக அதிகாரிகள் மற்றும் ஜப்பான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

 

Thu, 06/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை