வாரத்திற்கு கடனட்டையளவு பிளாஸ்டிக் சாப்பிடும் மனிதன்

உலகிலுள்ள ஒவ்வொருவரும் வாரத்துக்கு 5 கிராம் வரையிலான பிளாஸ்டிக்கை உட்கொள்ளக்கூடுமென நம்பப்படுகிறது. அது ஒரு கடனட்டையை உட்கொள்வதற்கு சமமாகும்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நியூகாசில் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் குடிநீர் மூலமாகவே, மிக அதிகமான பிளாஸ்டிக், மனிதர்களின் உடலில் சென்று சேர்வது தெரியவந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, கிளிஞ்சல் வகைக் கடல் உயிரினங்கள் மூலமாக, பிளாஸ்டிக் மனித வயிற்றுக்குள் போகிறது. அந்தக் கிளிஞ்சல் உயிர்களை மொத்தமாக உட்கொள்வதால், அவற்றின் செரிமான மண்டலத்தில் உள்ள பிளாஸ்டிக், மனிதர்களின் வயிற்றுக்கும் செல்கிறது.

2000ஆம் ஆண்டுக்குப் பிந்திய உலகில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கின் அளவு, அதற்கு முந்திய எல்லா ஆண்டுகளிலும் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக்கின் அளவுக்குச் சமமாகும். குடிநீரில் இருந்துமட்டும் சராசரியாக ஒருவர், 1,769 பிளாஸ்டிக் துகள்களை உட்கொள்வதாக மதிப்பிடப்படுகிறது.

அமெரிக்காவில் சோதிக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளில், சுமார் 95 வீதமான மாதிரிகளில், பிளாஸ்டிக் நுண்ணிழைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒப்பீட்டளவில் ஐரோப்பிய நாடுகளில் சுமார் 72 வீதமான மாதிரிகளில் மட்டுமே பிளாஸ்டிக் நுண்ணிழைகள் இருந்தன.

இடத்துக்கு இடம் பிளாஸ்டிக் கலப்படத்தின் அளவு வேறுபடுகிறதே தவிர, பிளாஸ்டிக் கலப்படம் இல்லாத இடம் இல்லை என்று அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

Thu, 06/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை