டெங்கு நோய் பரவுவதை தடுக்க விசேட வேலைத்திட்டம்

பலாங்கொடை நகரில் டெங்கு நுளம்புகள் ​பெருகும் இடங்களை அழி

த்துவிடும் முகமாக புகை விசிறும் வேலைத்திட்டமொன்று அண்மையில் இடம்பெற்றது. பலாங்கொடை நகரிலும் அதன் சூழவுள்ள பிரதேசங்களிலும் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்கள் அதிகரித்துள்ளமையால் அந்த இடங்களை இனம்கண்டு புகை விசிறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பலாங்கொடை நகரசபை பொது சுகாதார பரிசோதகர் பி. எல். கே. வாலித குமாரசிங்க தெரிவித்தார்.

பலாங்கொடை நகரசபை தலைவர் சமிக ஜயமினி வெவேகெதரவின் ஆலோசனைக்கு அமைய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் சுகாதார பரிசோதகரும், அதிகாரிகளும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.

பலாங்கொடை தினகரன் நிருபர்

Thu, 06/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை