மிஹிந்தலையில் லேக்ஹவுஸ் ஆலோக்க பூஜா இன்று ஆரம்பம்

57ஆவது ஆண்டாகவும் நடைபெறவுள்ள மிஹிந்தலை- லேக்ஹவுஸ் ஆலோக்க பூஜா புனித நிகழ்வு இம்முறையும் வெகு விமர்சையாக இன்று (15) ஆரம்பமாகவுள்ளது.

மஹிந்த தேரரின் வருகையை நினைவுகூரும் முகமாக மூன்று நாட்களுக்கு மிஹிந்தலை ஆலோக்க பூஜா நிகழ்வு மிஹிந்தலை ரஜமஹா விஹாரை தலைமை தேரர் வணக்கத்துக்குரிய வலவாஹெங்குனவெவே தம்மரத்ன தேரரின் ஞான உபதேசத்துடன் லேக்ஹவுஸ் நிறுவன தலைவர் கிரிஷாந்த குரேயின் ஆலோசனையின் பேரில் நடைபெறவுள்ளது.

லேக்ஹவுஸ் நிறுவனத்தால் (57) தடவையாகவும் மேற்கொள்ளப்படும் இப் புனித நிகழ்வுக்கு இணை அனுசரணையை இலங்கை மின்சார சபை வழங்குகின்றது. அத்துடன் டயலொக் நிறுவனம், சிலோன் பிஸ்கட் கம்பனி, ஸ்ரீலங்கா காப்புறுதிக் கம்பனி, டி. எப். சி. சி. வங்கி, தேசிய சேமிப்பு வங்கி என்பன பங்களிப்புச் செய்கின்றன.

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை தொடர்வதால் நாட்டின் பல மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் 7 மாவட்டங்களுக்கு டெங்கு நோய் பரவும் சாத்தியம் உள்ளதாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை தொடர்ந்து பெய்வதால் சுற்றாடலில் தேங்கும் இடங்களில் நுளம்புகள் பெருகிவருவது அதிகரித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி ,மாத்தறை, இரத்தினபுரி ஆகிய பிரதேசங்கள் டெங்கு அனர்த்தம் அதிகம் உள்ள மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு இந்த மாவட்டங்களிலுள்ள சுகாதார அதிகாரிகளுடன் கூட்டாக நோய் ஒழிப்பு விஷேட வேலைத்திட்டங்களை கடந்த சில தினங்களாக மேற்கொண்டு வருகிறது.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 06/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை