எகிப்தில் நோன்பு திறப்பதற்கு உணவு பரிமாறி புதிய சாதனை

நோன்பு திறப்பதை ஒட்டி எகிப்து நாட்டில் உலகின் மிக நீளமான உணவு மேசை அமைக்கப்பட்டு, உணவு பரிமாறி கின்னஸ் சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

கெய்ரோ கிழக்கு பாலைவன பகுதியில் இந்த சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் சுமார் 3 ஆயிரத்து 189 மீற்றர் நீளத்திற்கு அமைக்கப்பட்ட மேசையில், 7 ஆயிரம் பேருக்கு உணவு பரிமாறப்பட்டது.

முன்னதாக ஐக்கிய அரபு இராச்சியத்தில், அஜ்மன் நகரில் கடந்த ஆண்டு, 2 ஆயிரத்து 983 மீற்றர் நீள மேசை அமைக்கப்பட்டு 6 ஆயிரம் பேருக்கு உணவு பரிமாறப்பட்டதே சாதனையாக இருந்துவந்த நிலையில், அதனை எகிப்து 200 மீற்றர் வித்தியாசத்தில் முறியடித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள் கெய்ரோ நகர நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட நோன்பு திறக்கும் உணவுகள் மற்றும் பழச்சாறுகள் ஆகியவற்றை ஒருவருக்கொருவர் பரிமாறி உண்டு மகிழ்ந்தனர்.

Wed, 06/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை