Header Ads

ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்?

பெயரை அறிவிக்க இப்போது அவசரமில்லை

 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தவிதமான அவசரமும் கிடையாதென அமைச்சர் பீ.ஹரீசன் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் யார் என அறிவிக்கப்பட்ட பின்னரும், ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட பின்னர் யார் தமது வேட்பாளர் என்பதை அறிவிப்பதாகவும், வேட்பாளர் யார் என்பதை பகிரங்கப்படுத்தாமல் இருப்பதால் அவரின் மதிப்பு அதிகரிக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். சிகிரிய பிரதேசத்தில் நேற்று

நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்தக் கருத்தை முன்வைத்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிக்காத நிலையில், பல்வேறு தரப்பினர் வேட்பாளர்கள் பற்றி பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருவதாகவும் அவர் கூறினார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ அல்லது வேறு கட்சியோ தமது வேட்பாளராக கோட்டாபய ராஜபக்‌ஷவை நிறுத்துவது தொடர்பில் மஹிந்த ராஜபக்‌ஷ இன்னமும் அறிவிக்கவில்லை. இவ்வாறான நிலையில் அவருடைய ஆதரவாளர்களே பல்வேறு பெயர்களை முன்வைத்து வருகின்றனர். ஜனாதிபதித் தேர்தல் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எந்தவொரு சவாலும் இல்லை. இதைவிட சவாலான தருணங்களில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

19ஆவது திருத்தச்சட்டமூலத்தை மிகவும் ஆர்வத்துடன் நிறைவேற்றியது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே. அதில் குறைபாடு இருந்தால் அதனை பாராளுமன்றத்துக்குள் கலந்துரையாட முடியும். எந்தவொரு விடயத்திலும் குறைபாடுகள் இருக்கலாம் அவற்றை சீர்செய்ய முடியும். 18ஆவது திருத்தத்தினால் ஏகாதிபத்தியவாதம் அதிகரித்திருந்ததுடன், 19ஆவது திருத்தத்தின் மூலம் அதனை சீர்செய்ய முடிந்ததாலேயே சிலருக்கு தற்பொழுது அதன் குறைபாடுகளைச் சுட்டிக்காட்ட முடிகிறது. 19ஆவது திருத்தத்தில் மாற்றம்கெண்டுவரவேண்டுமாயின் அதனை பாராளுமன்றத்திலேயே சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

Tue, 06/25/2019 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.