பாராளுமன்ற தெரிவுக் குழு விசாரணை; தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் தகவல்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்

மற்றுமொரு ‘மில்லேனியம் சிட்டி’ யாக்க வேண்டாம்

பாராளுமன்ற தெரிவுக் குழுவில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் தகவல்களை வெளியிடுவது நிறுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்னும் ஒரு மில்லேனியம் சிட்டியாக இது மாற இடமளிக்கக் கூடாதென்றும்

அவர் நேற்று சபையில் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் புலனாய்வு பிரிவினருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விதத்தில் தகவல்களை வெளிப்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சபையில் கேட்டுக்கொண்டார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களைப் பகிரங்கப்படுத்த வேண்டாம் என்றும் அதன்மூலம் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியல்ல, எதிர்க்கட்சியினரை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தபோதே எதிர்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, எதிர்க்கட்சியினர் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வர இருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர்கள் தெரிவுக்குழுவில் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

லோரன்ஸ் செல்வநாயகம், மகேஸ்வரன் பிரசாத்

Thu, 06/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை