ரயில்வே ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிப் பகிஷ்கரிப்பு

ரயில்வே தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவு முதல் இரண்டு நாள் பணிப்பகிஷ்கரிப்பினை ஆரம்பித்துள்ளன.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நேற்று பகல் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்தே ரயில்வே தொழிற்சங்கங்கள் இவ்வாறு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.

சம்பளம், கொடுப்பனவு, சலுகைகள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்தே மேற்படி பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ரயில்வே சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உட்பல பல பணிகளுக்கு பணியாளர் பற்றாக்குறை ஏற்படும்.

இன்றைய தினம் போக்குவரத்து அமைச்சருடன் ரயில்வே தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை ரயில்வே திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டதாக ரயில்வே திணைக்களம் அறிவித்தது.

Sat, 06/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை