பிரதமர் மோடியின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

பயங்கரவாதத்துக்கு எதிராக சகல நாடுகளும் போராட வேண்டுமென டில்லியில் மைத்திரி தெரிவிப்பு

இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கை வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். இது இலங்கை மக்களுக்கு பெருமை தரும் விடயமாகும். உலகின் அனைத்து ஜனநாயக நாடுகளும் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராட வேண்டும். வலிமையான நாடுகளோ சிறிய நாடுகளோ பயங்கரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று புதுடில்லியில் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியுடன் டெல்லியில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பின் பின்னர் இந்திய ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.

இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

 இந்திய பிரதமர் மோடி இலங்கை வருவது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்தியர்களும் இலங்கை மக்களும் அண்டை நாட்டுக்காரர்கள் என்பதுடன், நெருங்கிய நண்பர்கள். சுமார் 2,600ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்திய - இலங்கை உறவு இருந்திருக்கிறது.

 மோடியின் இலங்கை வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். இது இலங்கை மக்களுக்கு பெருமை தரும் விடயமாக இருக்கிறது. உலகின் அனைத்து ஜனநாயக நாடுகளும் தீவிரவாதத்துக்கு எதிராகப் போராட வேண்டும். வலிமையான நாடுகளோ சிறிய நாடுகளோ எதுவாக இருப்பினும் தீவிரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஒன்றிணைய வேண்டும்.

 உலகம் முழுவதும் தீவிரவாதம் வெவ்வேறு வடிவங்களில் பரவிக் கிடக்கிறது. சில நாடுகளில் வீட்டுக்குள்ளேயே தீவிரவாதிகள் இருக்கின்றனர். சர்வதேச தீவிரவாதம் எப்படி முளைக்கிறது என்பது பிரச்சினை இல்லை. ஆனால், அது அனைவரையும் இன்று பாதிக்கிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Sat, 06/01/2019 - 11:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை