மிளகின் விலையில் வீழ்ச்சி; உற்பத்தியாளர்கள் பாதிப்பு

கடந்த இரண்டு வருட காலமாக சந்தையில் மிளகு ஒரு கிலோவின் விலை நூற்றுக்கு 60% வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக மிளகு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். பலாங்கொடை பிரதேச மிளகு உற்பத்தியாளர்கள் பல்வேறு பொருளாதார பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துவருகின்றனர்.

காய்ந்த மிளகு ஒரு கிலோ 1300 ரூபாவாக இருந்து வந்தபோதிலும், அந்த விலை 600 ரூபாவுக்கு குறைந்துள்ளது. பச்சை மிளகு ஒரு கிலோ 380 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட போதிலும் அதன் விலை 150 ரூபாய் வீழ்ச்சி அடைந்துள்ளதாக மிளகு உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். வீழ்ச்சியடைந்துள்ள மிளகின் விலையை அதிகரிப்பது தொடர்பாக இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க அதிகாரிகள் தவறியுள்ளதாக மிளகு உற்பத்தியாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

பலாங்கொடை பிரதேசத்தில் பல கிராம சேவகர்பிரிவுகளில் வாழும் மக்களின் பிரதான தொழிலாக மிளகு உற்பத்தி இருந்துவருகின்றது.

மிளகின் விலை வீழ்ச்சியின் காரணமாக இப்பகுதியில் மிளகு உற்பத்தியாளர்கள் உற்பத்தியை கைவிட தீர்மானித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

(பலாங்கொடை தினகரன் நிருபர்)

Wed, 06/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை